Sunday, 24 July 2016

குழந்தைகளை ஜீனியஸாக்க உதவும் புரட்சிகரமான கல்விகுழந்தைகளை ஜீனியஸாக்க உதவும் புரட்சிகரமான ஆரம்பக் கல்வியை இந்த உலகிற்கு அளித்தவர்கள் குறித்து நாம் இப்போது அறிந்துகொள்வோம்.

வலது மூளை கல்வியின் வரலராறானது டாக்டர்கள் ராபர்ட் அர்ன்ஸ்டைன் மற்றும் ராஜர் ஸ்பெர்ரி ஆகியோரின் ஆராய்ச்சின் விளைவாக 1960களின் இறுதியில் உருவானது. இந்த ஆய்வுகள் அவருக்கு 1981இல் உடலியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசைப் பெற்று தந்தது. பெருமூளை துருவங்களின் (cerebral hemispheres) செயல்பாட்டு சிறப்புகள் குறித்த அவரது கண்டுபிடிப்புகளுக்காக ஸ்பெர்ரிக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. “மூளைப் பிளவு” (Split brain) எனப்படும் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கொண்டு அவர் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். உலகில் முதல் முறையாக இடது மற்றும் வலது மூளை துருவங்கள் குறித்த புதிய அறிவு அப்போதுதான் உலகிற்குக் கிடைத்தது. இரு துருவங்களுக்கும் வெவ்வேறு குணாம்சங்கள் உள்ளன என்றும், இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

ஸ்பெர்ரியும் அவரது சகாக்களும் மூளையின் வெவ்வேறு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகையில், ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் உள்ள டாக்டர் க்ளென் டோமன் என்பவர் பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக சில ஆய்வ்களை மேற்கொண்டு வந்தார். சிலவிதமான உடல் இயக்கங்கள் மூளைக்கு தூண்டுதலாக இருப்பதை அப்போது அவர் கண்டுபிடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், நல்ல நாகரிகம் பெற்றுவிட்ட குழந்தைகள் தொடங்கி, புராதன சமூகச் சூழலில் வாழும் குழந்தைகள் வரை அவர் வாழ்ந்து ஆய்வுகள் செய்துள்ளார். முதன்மையில் அவரது பணிகள் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் இருந்தது. பின்னர் அவர் பாதிப்புகள் ஏதுமற்ற இயல்பான குழந்தைகளுக்கான மூளை வளர்ச்சி குறித்தும் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். புதிய வழிமுறைகளை கண்டுபிடித்தார். ‘ஃப்ளாஷ் கார்டுகள்’ மற்றும் புள்ளிகள் நிறைந்த ‘மேத்-டாட்’ கார்டுகளைப் பயன்படுத்து மூளை மற்றும் உடல் வளர்ச்சியைத் தூண்டும் வழிமுறைகள் அவை. கைக் குழநதைகள் தொடங்கி சிறுவர்கள் வரை மூளை வளர்ச்சி மற்றும் உடலியல் வளர்ச்சியை மேம்படுத்த க்ளென் டோமன் மெதட் ஆனது உலகெங்கிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. IAHP (The Institutes for the Achievement of Human Potential) எனும் நிறுவனத்தை நிறுவி 25,000க்கும் மேற்பட்ட குடும்பங்களோடு கடந்த ஐம்பது ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகப் பணி புரிந்துள்ளார். தன்னுடைய புத்தகங்கள் மூலம் மில்லியன் கணக்கான குடும்பங்களில் குழந்தை வளர்ப்பு குறித்த பெரும் தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

ஆர்ன்ஸ்டை, ஸ்பெர்ரி மற்றும் டாக்டர் க்ளென் டோமன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் மூளையியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக கடந்த 20 ஆண்டுகளில், ஆரம்ப கல்வி வளர்ச்சித் துறையில் புரட்சிகரமான புதிய அறிவுடன் கூடிய மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆரம்ப கல்வி வளர்ச்சியின் வரலாற்றில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு மனிதர் திரு. மகோடோ சிசிடா. இவர் ஒரு ஜப்பானியர். ஆசிரியரான இவர், குழந்தை கருவில் இருகும்போதே குழந்தையின் வளர்ச்சிக்கான தூண்டுதலைக் கொடுத்து கற்கும் ஆற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டார். அவரால் வடிவமைக்கப்பட்ட “வலது மூளை வழிக் கல்வி” சிசிடா மெதட் என்று அறியப்படுகிறது.

ஆரம்பத்திலேயே வலது மூளைக் கல்வி பெற்று வளரும் குழந்தைகள் வேகமாகப் படிக்கும் திறன், சிக்கலான ஃபார்முலாக்களைக் கூட எளிதில் தீர்க்கக்கூடிய திறம், இசையமைக்கும் திறன் மற்றும் இதர வியத்தகு திறன்களை 6 வயதுக்குள்ளேயே கொண்டிருந்தனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ஹெகுரு என்பது வலது மூளைக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு பயிற்சி. இதை உருவாக்கியவர் ஹிரொதாதா மற்றும் ருயிக்கோ ஹென்மி எனும் ஜப்பானியர்கள்.
இந்த சர்வதேச பயிற்சி முறைகளை இந்திய முறைக்கு ஏற்ற விதத்தில் நுட்பத்துடன் மாற்றியமைத்து தாய்மார்களுக்கு உதவ உருவாக்கப்பட்டதே மை ஸ்மார்ட் பேபி எனும் பயிற்சியாகும். எதிர்கால உலகின் போட்டிகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்குத் தேவையான புது-யுகக் கல்வி மற்றும் ஆய்வு பூர்வமான பல்வேறு தகவல்களை மை ஸ்மார்ட் பேபி உங்களுக்கு அறிமுகம் செய்யும்.
ஒவ்வொரு குழந்தையின் அதிசக்தி வாய்ந்த மூளையினை சரியான முறையில், மேம்பட்ட வகையில் தூண்டிவிட்டு அவருக்குள் இருக்கும் ஜீனியஸை வெளிக்கொண்டுவர தேவையான அறிவு, உபாயங்கள் மற்றும் வழிமுறைகளை நாங்கள் அம்மாக்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம்.
வாருங்கள்! ஒவ்வொரு குழந்தையையும் ஜீனியஸாக்குவோம்!
உங்களுக்கு உதவும் வண்ணம் தற்போது மை ஸ்மார்ட் பேபி “Multiply your Babies’ intelligence’ எனும் பாடத்தை ஆன்லைனில் இலவசமாக வழங்குகிறது.  பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் To register for free online course click here
இப்பயிற்சி குறித்த இலவசக் கையேட்டை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
To download free e-book click here


Wednesday, 20 July 2016

Right Brain Education - know the people who gave us a revolutionary learning methodology


The history of Right Brain Education starts with the research done by Drs. Robert Ornstein and Roger Sperry in the late 1960’s. The results of these studies later led to Roger Sperry being awarded the Nobel Prize in Physiology or Medicine in 1981. Sperry received the prize for his discoveries concerning the functional specialization of the cerebral hemispheres. With the help of so called "split brain" patients, he carried out experiments (just like the one you can perform by yourself in the Split Brain Experiments Game), and for the first time in history, knowledge about the left and right hemispheres was revealed. They found that each hemisphere contains a distinct personality, or set of characteristics, opposite from the other.
While Sperry and his colleagues found the different functioning of the brains, there was Dr. Glen Domman of Philadelphia, Pennsylvania who was working with stroke victims and discovered that certain movements stimulated brain development.  Glenn Doman lived with, studied, or worked with children in more than one hundred nations, ranging from the most civilized to the most primitive.  His primary work continued to be with severely brain-injured children. Glenn Doman used flashcards of words and math-dot cards to stimulate the brain and physical movement. Glenn Doman method has been followed widely to accelerate development in children beginning infancy.  He founded IAHP (The Institutes for the Achievement of Human Potential) and dealt intimately with more than twenty-five thousand families over the last fifty years and strongly influenced millions of families through his books. 
Discoveries made by Ornstein, Sperry and Dr. Gelenn Doman encouraged other brain researchers in this field and as a result during the past 20 years there has been a tremendous progress and revolutionary new knowledge contributing to the development of Early learning.
There is yet another man whom we should know whose early learning educational methods are practise widely. He is Makoto Shichida, a Japanese tutor, who began to use the stimulation methods and accelerated learning techniques with very young children, beginning prenatally.  “Right brain friendly” method developed by him was known as Shichida method and is so successful across the globe. Those children who received this training had capabilities of speed reading, solving complicated equations, composing music and other amazing Talents even before the age of Six.

HEGL also known as Heguru is yet another Right Brain based early learning program. HEGL stands for Henmi Education General Laboratory.  This method was developed by Hirotada and Ruiko Henmi over 30 years.

MySmartBaby is an initiative to provide mothers with all these international training methods to suit the Indian learning system. The MySmartBaby program will introduce various research based facts and discuss new age learning methods which are appropriate to raise children who will face the challenges of society in a couple of decades from now.

The structure of the program and the materials provided to you are so thoughtfully designed that the mother gets trained, applies the knowledge and uses the techniques and methods learned to stimulate and activate the child’s incredibly powerful brain

Image from the internet


Sunday, 10 July 2016

A GLOBAL PERSPECTIVE ON EARLY CHILDHOOD


The first 6 to 8 years of a child’s life are globally acknowledged to be the most critical years for lifelong development since the pace of development in these years is extremely rapid. Recent research in the field of neuroscience, particularly on the brain, has provided convincing evidence of the ‘critical periods’ located within these early years for the forming of synaptic connections in the brain and for the full development of the brain’s potential. Research has also indicated that if these early years are not supported by, or embedded in, a stimulating and enriching physical and psychosocial environment, the chances of the child’s brain developing to its full potential are considerably, and often irreversibly, reduced. This stage in life is also important as a foundation for the inculcation of social values and personal habits, which are known to last a lifetime. What follows logically is the crucial importance of investing in these early years to ensure an enabling environment for every child, and thereby a sound foundation for life, which is not only the right of every child but which will also impact, in the long term, the quality of human capital available to a country.


ஒரு குழந்தையின் ஆயுட்காலத்தில் 6 முதல் 8 வயது வரையிலான பருவமானது அதன் வாழ்நாள் முழுவதுமான வளர்ச்சிக்கான மிக முக்கியமான கட்டம் என்றும், அப்பருவத்தில்தான் அதிவேக வளர்ச்சி ஏற்படுகிறது என்றும் உலகளாவிய அளவில் இன்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ‘முக்கியமான காலகட்டத்தில்’ மூளையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவைப்படும் நரம்பிணைப்புகளை ஏற்படுத்தும் காலம் என்று நிறுவுவதற்கான போதுமான ஆதாரங்களை சமீபத்திய நரம்பியல் துறை ஆய்வுகள், குறிப்பாக மூளை வளர்ச்சி குறித்த ஆய்வுகள் வழங்கியுள்ளன. இந்த ஆரம்பகாலகட்டத்தில், மூளைக்குத் தூண்டுதல் தரும் வகையிலான பயிற்சிகள் மட்டுமல்லாது உடலையும், சமூகம் சார்ந்த உளவியல் வளர்ச்சியையும் மேம்படுத்தும் சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அந்த ஆய்வுகள் கூறுகின்றன. இல்லையெனில், குழந்தையின் முழுமையான மூளை வளர்ச்சியானது கணிசமாகக் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் ஒருவரை வழிநடத்தத் தேவையான சமூக மதிப்பீடுகள் மற்றும் பண்புகளை விதைப்பதற்கான சரியான பருவமும் இந்த குழந்தைப் பருவமே. இதனால் நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், ஒவ்வொரு குழந்தையின் மேம்பட்ட வளர்ச்சிக்கும், சிறப்பானதொரு வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்திடவும் இந்த தொடக்க காலகட்டமானது மிக மிக முக்கியமானது. இது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை மட்டுமல்லாது, நீண்டகால அடிப்படையில் ஒரு நாட்டின் தரமான மனித மூலதனத்தை உருவாக்கிட நாம் பொறுப்பான முறையில் பங்களிப்பதாகும்.source: NCERT
image courtesy: spreepro