Sunday 24 July 2016

குழந்தைகளை ஜீனியஸாக்க உதவும் புரட்சிகரமான கல்வி



குழந்தைகளை ஜீனியஸாக்க உதவும் புரட்சிகரமான ஆரம்பக் கல்வியை இந்த உலகிற்கு அளித்தவர்கள் குறித்து நாம் இப்போது அறிந்துகொள்வோம்.

வலது மூளை கல்வியின் வரலராறானது டாக்டர்கள் ராபர்ட் அர்ன்ஸ்டைன் மற்றும் ராஜர் ஸ்பெர்ரி ஆகியோரின் ஆராய்ச்சின் விளைவாக 1960களின் இறுதியில் உருவானது. இந்த ஆய்வுகள் அவருக்கு 1981இல் உடலியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசைப் பெற்று தந்தது. பெருமூளை துருவங்களின் (cerebral hemispheres) செயல்பாட்டு சிறப்புகள் குறித்த அவரது கண்டுபிடிப்புகளுக்காக ஸ்பெர்ரிக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. “மூளைப் பிளவு” (Split brain) எனப்படும் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கொண்டு அவர் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். உலகில் முதல் முறையாக இடது மற்றும் வலது மூளை துருவங்கள் குறித்த புதிய அறிவு அப்போதுதான் உலகிற்குக் கிடைத்தது. இரு துருவங்களுக்கும் வெவ்வேறு குணாம்சங்கள் உள்ளன என்றும், இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

ஸ்பெர்ரியும் அவரது சகாக்களும் மூளையின் வெவ்வேறு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகையில், ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் உள்ள டாக்டர் க்ளென் டோமன் என்பவர் பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக சில ஆய்வ்களை மேற்கொண்டு வந்தார். சிலவிதமான உடல் இயக்கங்கள் மூளைக்கு தூண்டுதலாக இருப்பதை அப்போது அவர் கண்டுபிடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், நல்ல நாகரிகம் பெற்றுவிட்ட குழந்தைகள் தொடங்கி, புராதன சமூகச் சூழலில் வாழும் குழந்தைகள் வரை அவர் வாழ்ந்து ஆய்வுகள் செய்துள்ளார். முதன்மையில் அவரது பணிகள் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் இருந்தது. பின்னர் அவர் பாதிப்புகள் ஏதுமற்ற இயல்பான குழந்தைகளுக்கான மூளை வளர்ச்சி குறித்தும் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். புதிய வழிமுறைகளை கண்டுபிடித்தார். ‘ஃப்ளாஷ் கார்டுகள்’ மற்றும் புள்ளிகள் நிறைந்த ‘மேத்-டாட்’ கார்டுகளைப் பயன்படுத்து மூளை மற்றும் உடல் வளர்ச்சியைத் தூண்டும் வழிமுறைகள் அவை. கைக் குழநதைகள் தொடங்கி சிறுவர்கள் வரை மூளை வளர்ச்சி மற்றும் உடலியல் வளர்ச்சியை மேம்படுத்த க்ளென் டோமன் மெதட் ஆனது உலகெங்கிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. IAHP (The Institutes for the Achievement of Human Potential) எனும் நிறுவனத்தை நிறுவி 25,000க்கும் மேற்பட்ட குடும்பங்களோடு கடந்த ஐம்பது ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகப் பணி புரிந்துள்ளார். தன்னுடைய புத்தகங்கள் மூலம் மில்லியன் கணக்கான குடும்பங்களில் குழந்தை வளர்ப்பு குறித்த பெரும் தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

ஆர்ன்ஸ்டை, ஸ்பெர்ரி மற்றும் டாக்டர் க்ளென் டோமன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் மூளையியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக கடந்த 20 ஆண்டுகளில், ஆரம்ப கல்வி வளர்ச்சித் துறையில் புரட்சிகரமான புதிய அறிவுடன் கூடிய மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆரம்ப கல்வி வளர்ச்சியின் வரலாற்றில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு மனிதர் திரு. மகோடோ சிசிடா. இவர் ஒரு ஜப்பானியர். ஆசிரியரான இவர், குழந்தை கருவில் இருகும்போதே குழந்தையின் வளர்ச்சிக்கான தூண்டுதலைக் கொடுத்து கற்கும் ஆற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டார். அவரால் வடிவமைக்கப்பட்ட “வலது மூளை வழிக் கல்வி” சிசிடா மெதட் என்று அறியப்படுகிறது.

ஆரம்பத்திலேயே வலது மூளைக் கல்வி பெற்று வளரும் குழந்தைகள் வேகமாகப் படிக்கும் திறன், சிக்கலான ஃபார்முலாக்களைக் கூட எளிதில் தீர்க்கக்கூடிய திறம், இசையமைக்கும் திறன் மற்றும் இதர வியத்தகு திறன்களை 6 வயதுக்குள்ளேயே கொண்டிருந்தனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ஹெகுரு என்பது வலது மூளைக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு பயிற்சி. இதை உருவாக்கியவர் ஹிரொதாதா மற்றும் ருயிக்கோ ஹென்மி எனும் ஜப்பானியர்கள்.
இந்த சர்வதேச பயிற்சி முறைகளை இந்திய முறைக்கு ஏற்ற விதத்தில் நுட்பத்துடன் மாற்றியமைத்து தாய்மார்களுக்கு உதவ உருவாக்கப்பட்டதே மை ஸ்மார்ட் பேபி எனும் பயிற்சியாகும். எதிர்கால உலகின் போட்டிகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்குத் தேவையான புது-யுகக் கல்வி மற்றும் ஆய்வு பூர்வமான பல்வேறு தகவல்களை மை ஸ்மார்ட் பேபி உங்களுக்கு அறிமுகம் செய்யும்.
ஒவ்வொரு குழந்தையின் அதிசக்தி வாய்ந்த மூளையினை சரியான முறையில், மேம்பட்ட வகையில் தூண்டிவிட்டு அவருக்குள் இருக்கும் ஜீனியஸை வெளிக்கொண்டுவர தேவையான அறிவு, உபாயங்கள் மற்றும் வழிமுறைகளை நாங்கள் அம்மாக்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம்.
வாருங்கள்! ஒவ்வொரு குழந்தையையும் ஜீனியஸாக்குவோம்!
உங்களுக்கு உதவும் வண்ணம் தற்போது மை ஸ்மார்ட் பேபி “Multiply your Babies’ intelligence’ எனும் பாடத்தை ஆன்லைனில் இலவசமாக வழங்குகிறது.  பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் To register for free online course click here
இப்பயிற்சி குறித்த இலவசக் கையேட்டை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
To download free e-book click here


No comments:

Post a Comment