Sunday, 10 January 2016

பச்சிளம் குழந்தைகள் ஒவ்வொரும் ஜீனியஸ்களே!


தம் குழந்தைகள் வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் ஒரு சூப்பர் சாதனையாளராக வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் கணவாக இருக்கிறது.  தம் குழந்தையின் எதிர்காலம் பற்றிய பெற்றோரின் கனவு முதலடி என்றால், அதற்காக என்ன செய்வது என்பது இரண்டாவது முக்கிய அடியாகும்.

இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பழமையான, காலாவதியான முறைகளைக் கொண்டு குழந்தைகள் வளர்க்கப்படுவார்களேயானால் இன்னும் பத்தாண்டுகளில் போட்டி நிறைந்த இவ்வுலகில் எதிர்வரப்போகும் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் திணறிப்போவார்கள் என்று அறிவுத்துறை வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

மூளையியல் ஆராய்ச்சியின் விளைவாக நிகழ்ந்துவரும் சமீபத்திய வளர்ச்சிகளை அறிந்திராமல் இருப்பதே இன்றைய பெற்றோருக்கு இருக்கும் மாபெரும் பின்னடைவாகும். மூளையின் வளர்ச்சி, அதன் உள்ளார்ந்த திறன்கள், அதை மேம்படுத்தத் தேவைப்படும் வெளிப்புற தூண்டுதல்கள், பயிற்சிகள் பற்றி அறியாததால், தங்களது பிள்ளைகளுக்குள் இருக்கும் அசாதாரண சக்தியை அவர்களால் மேம்படுத்த முடிவதில்லை.

கடந்த 20 வருடங்களாக, சிசு மற்றும் பச்சிளம் குழந்தைகள் வளர்ச்சி குறித்த ஆய்வுகள் பன்மடங்காக முன்னேறியுள்ளன. புரட்சிகரமான பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
பிறந்தது முதலே குழந்தைகளால் வார்த்தைகளை, எண்களை, புகைப்படங்களை, ஒலிகளை அசாதாரணமாக உள்வாங்கிக்கொள்ள முடியும் என்று தங்களுடைய நினைவாற்றலை வியத்தகு வழியில் பயன்படுத்தி கற்க முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகள் ஒவ்வொரும் ஜீனியஸ்களே, பல அற்புதமான சக்திகள் அவர்களுக்குள் புதைந்துகிடைக்கின்றது.

பச்சிளம் குழந்தைகளின் மூளையானது இடைவிடாது கற்பதற்கான ஆர்வத்தோடு எப்போதும் சுறுசுறுப்பாகவே உள்ளது, குழந்தைகளின் இந்த கற்கும் ஆர்வத்திற்கு குழந்தைப் பருவத்திலேயே அம்மாக்கள் தீனி போடும் வகையில் பயிற்சிகள் கொடுத்தால் நிச்சயமாக அடுத்து ஒரு பில் கேட்ஸோ அல்லது டெண்டுல்கரையோ அல்லது ஒரு கல்பனா சாவ்லாவையோ உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறையை நீங்கள் தொடங்கி விட்டீர்கள் என்று சொல்லலாம்.

கல்வி, பயிற்சி என்றால் வழக்கமான கல்வி முறை என்றோ, மனப்பாடம் செய்வது, கல்வியில் மதிப்பெண் பெறுவதற்கு ஓர் இயந்திரமாக குழந்தையை தயார்படுத்துவது என்று நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இது மூளையின் அற்றலை ஊக்குவிக்க, போஷித்திட கொடுக்கப்படும் பயிற்சி மட்டுமே. கட்டாயத் திணிப்பின்றி – உரையாடல் மூலமாக, என்றென்றும் பொய்த்திடாத அன்பின் மூலமாக, ஊக்குவிப்பின் மூலமாக  உயிரியல் புரிதல் கொண்டு நல்லதொரு கற்கும் அனுபவத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு வழங்கிட உதவுவதே இந்த மை ஸ்மார்ட் பேபி பயிற்சி.


‘மை ஸ்மார்ட் பேபி’ பாடதிட்டம் மற்றும் அம்மாக்களுக்கான பயிற்சி பற்றிய தகவல்களுக்கு 9840999708 / 9500090955 எனும் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். மேலும், www.mysmartbaby.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பயிற்சி பற்றிய அறிமுக கையேட்டை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.



No comments:

Post a Comment