உங்கள் குழந்தையின் மேதமையை தீர்மானிப்பது மரபணு மட்டுமல்ல, ஒரு அம்மாவாக
நீங்கள் உங்கள் குழந்தைக்கு மிக இளம் வயதில் கொடுக்கக்கூடிய அனுபவங்களும் பயிற்சிகளும்தான்
என்பது பற்றியும்,
நம் குழந்தைகள் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர்களாகத் திகழ அவர்களுள் ஒளிந்திருக்கும்
ஆற்றலை எப்படி தூண்டிவிடுவது என்பதைப் பற்றியும் நாம் தொடர்கட்டுரைகளின் வாயிலாகப்
பார்த்து வருகிறோம்.
பச்சிளம் குழந்தைகளின், மூளை வளர்ச்சியின் ப்ரூனிங்
(pruning), லேர்னிங் (learning) மற்றும் மைலினேஷன் (myelination) எனப்படும் மூன்று
முக்கியமான நடைமுறைகளைப் பற்றி நாம் இத்தொடரில் பார்ப்போம்.
‘ப்ரூனிங்’ என்பது மூளையின் வியக்கத்தக்க ஒரு செயல்முறையாகும்.
பிறப்பிலேயே குழந்தையின் மூளையில் கோடிக்கணக்கான மூளை அணுக்கள் உள்ளன. வாழ்நாள் முழுதும் அவை அப்படியே இருப்பதில்லை. பயன்படுத்தப்படும்
மூளை அணுக்களும், ஆரம்பகாலத்திலேயே போதிய தூண்டுதல்கள் பெற்று மேம்படுத்தப்படும், செறிவுபடுத்தப்படும்
அணுக்கள் மட்டுமே வலுப்பெற்று நிரந்தர நரம்பியல் இணைப்புகளாக உருவாகும். அந்த இணைப்புகளே
தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் சேமிப்புக்கான ஒரு சர்க்யூட்டாக, ஒரு வலைப்பின்னலாக
பின்னாளில் உருவாகும்.
பயன்படுத்தப்படாத, தூண்டப்படாத மூளை அணுக்களானது
மடிந்து வீணாகிப் போகும். இதைத்தான் வல்லுனர்கள் ‘ப்ரூனிங்’ என்கின்றனர்.
ஆனால் இதற்கு நேரெதிரானது ‘லேர்னிங்’. மூளையின் நரம்பியல் சர்கியூட்கள்
பெறும் தூண்டுதல் அல்லது பயிற்சியின் மூலம் வலுப்பெற்று, நிரந்தரமான நரம்பியல் வலைப்பின்னல்களைப்
பெறுவதற்கு வகை செய்யும் ஒரு நடைமுறை இது.
‘மைலினேஷன்’ என்பது புதிய நரம்பியல் இணைப்புகளை ஏற்படுத்தி
தகவல் பரிமாற்றத்தை துரிதப்படுத்த உதவும் ஒரு நடைமுறை.
ஆக இயற்கையானது நமக்கு சொல்வது என்னவெனில் ‘பயன்படுத்திக்கொள்’
அல்லது ‘இழந்துவிடு’ என்பதேயாகும். அப்படியென்றால் பிறப்பிலேயே கிடைத்திருக்கும் மூளையின் அதிசயக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்த அல்லது அதை இழந்துவிடாமல்
இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
குழந்தையின் மூளைக்கு நிறைய தூண்டுதல்கள் கொடுத்து,
நிறைய கற்கும் அனுபவங்களை உண்டாக்க வேண்டும். ஒரு குழந்தை மேதையாக வளர்வதற்கு இளம்
வயதில் அதற்குக் கிடைக்கும் தூண்டுதலும், அனுப்வங்களுமே அடித்தளம்.
நம் குழந்தைகளுக்கு சிறந்ததை அளிக்கத் தவறிவிட்டு
நாம் மரபணுக்களை குறை சொல்லக்கூடாது.
உங்கள் குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் ஜீனியசை
வெளிக்கொண்டுவர நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொடுப்பதுதான்
MySmartBaby பயிற்சி.
No comments:
Post a Comment