Sunday, 27 December 2015

வாழ்க்கையில் வெற்றி பெற IQ மட்டும் போதுமானதல்ல!


ஒவ்வொரு குழந்தையும் பிறப்பிலேயே மேதைதான்! ஆனால், அந்த மேதமையை வெளிக்கொண்டுவர என்னவிதமான பயிற்சிகளையும் தூண்டுதல்களையும் குழந்தைப் பருவத்திலேயே கொடுக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் உங்களுக்கு சொல்லி வருகிறோம், இல்லையா?

மூளையின் வகையினங்கள் மற்றும் அதன் தற்காலத்தைய முக்கியத்துவம் பற்றி நாம் இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

மனிதர்களிடையே இடது மூளை வகையானவர்கள், வலது மூளை வகையானவர்கள் என இருவகையினர் உள்ளனர். இடது மூளையானது எல்லாவற்றையும் தருக்கப்பூர்வமாக (logical) அனுகுவது, காரண காரியங்களை ஆய்வு செய்து உள்வாங்கும் தன்மையுடையது அதனால் அது லாஜிக் அல்லாதவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அல்லது கற்றுக்கொள்வதில் தாமதமாகிறது. இதனால் இடது மூளையை மட்டுமே பயன்படுத்தி சிந்திக்கும் போது மூளையானது முழுமையான வளர்ச்சியைப் பெறுவதில்லை.

Logic, Common Sense இவையெல்லாம் முக்கியம்தான் என்றாலும், கற்றல் என்பது பல்வேறு அனுபவங்களின் வாயிலாகவும் கிடைக்கும்போது மட்டுமே நிலைத்ததொரு நினைவாற்றலை மூளை பெறுகிறது. அதற்கு உதவுவதுதான் வலது மூளை. இதை EQ என்கிறோம். இயல் அறிவைக் கடந்து குழந்தை கற்க, சிந்திக்கப் பழகும்போதே அதன் ஆற்றல் பன்மடங்காகப் பெருகும்.

மாபெரும் சாதனைகளைப் படைத்தவர்களின் பட்டியலை எடுத்துப்பார்ப்போமானால் அவர்கள் அனைவரும் தருக்கம், காரண காரிய ஆய்வுகளை எல்லாம் கடந்து அறிவைத் தேடியவர்களாக இருப்பார்கள். வலது மூளை வகையினர் புதுமைகளைப் படைப்பவர்களாக, கருத்து சிந்தனையாளர்களாக non-linear சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள்  என்று மூளையியல் ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“இடது மூளை வலது மூளைக்கு வழிவிட்டுச் செல்ல வேண்டும்” எனும் ஒரு பேச்சுவழக்கு தொழிற்துறையினரிடையே பிரபலமாகி வருகிறது. தொழிலில் அதாவது வாழ்வில் வெற்றிபெற Emotional Intelligence ம் தேவை என்று உளவியலாளர்களே கூட கருத்து தெரிவிக்கின்றனர். வலது மூளை அனுகுமுறையை “முழுமையான மூளை” அனுகுமுறை என்றும் அவர்கள் அழைக்கின்றனர், ஏனென்றால் அந்த அனுகுமுறையானது தருக்கத்திற்கு அப்பால் தனிப்பட்ட பிணைப்பு, ஆழ்ந்த உள்ளுணர்வு, நுண்ணறிவு மற்றும் உணர்வுசார் நுண்ணறிவு ஆகிய பண்புகளைக் கொண்டது.

இங்கிலாந்தில், தேசிய உடல்நலனையும் GDPயில் கணக்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற திட்டமானது வலது மூளையின் நோக்கங்கொண்ட அறிவிப்பு என அந்நாட்டு கார்டியன் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்வில் சாதனைகளைப் படைத்திட ஒருவருக்கு IQ – Intelligent Quotient மட்டும் போதும் என்று நம்பிவந்த எண்ணம் இன்று பொய்த்து வருகிறது, EQ – Emotional Quotient மற்றும் SQ – Spiritual Quotient ஆகிய நுண்ணறிவு இன்று அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

உங்கள் குழந்தையும் மேற்சொன்ன மூன்று அறிவுத்திறன்களையும் பெற்றிட வேண்டுமென்றால் குழந்தைப்பருவத்திலேயே அதற்கான தூண்டுதல்களை (stimulation) கொடுத்து மூளையின் ஆற்றல்களை வலுப்படுத்தி ஒரு முழுமையான மூளை வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்.

அதற்கான ஒரு கருவிதான் ‘மை ஸ்மார்ட் பேபி’.

‘மை ஸ்மார்ட் பேபி’ பாடதிட்டம் மற்றும் அம்மாக்களுக்கான பயிற்சி பற்றிய தகவல்களுக்கு 9840999708 / 9500090955 எனும் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். மேலும், www.mysmartbaby.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பயிற்சி பற்றிய அறிமுக கையேட்டை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.


பிரபலமான வலது மூளையினர் சிலர்: 
தாமஸ் ஆல்வா எடிசன், மைக்கலாஞ்சலோ, பிக்காசோ, வால்ட் டிஸ்னி, ஸ்டீவன் ஸ்பீல்பர்க், மார்க் ட்வைன், பீத்தோவன், ஆப்ரகாம் லிங்கன், பில் கேட்ஸ் (மற்றும் பலர்)No comments:

Post a Comment