Tuesday 29 September 2015

உங்கள் குழந்தையின் மேதமையை தீர்மானிப்பது மரபணு மட்டுமல்ல



உங்கள் குழந்தையை ஒரு சாதனையாளராக மாற்றுவது உங்களிடம்தான் உள்ளது என்பதைப் பற்றித்தான் நாம் தொடர்ந்து பேசி வருகிறோம்.

உங்கள் குழந்தையின் மேதமையை தீர்மானிப்பது மரபணு மட்டுமல்ல, ஒரு அம்மாவாக நீங்கள் உங்கள் குழந்தைக்கு மிக இளம் வயதில் கொடுக்கக்கூடிய அனுபவங்களும் பயிற்சிகளும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. சமூபத்திய மூளையியல் ஆராய்ச்சிகளும் இதையே தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

பச்சிளம் குழந்தையின் மூளை செயல்பாடு, அதற்குத் தேவைப்படும் தூண்டுதல்கள் மற்றும் மூளையின் செயல் திறன் குறித்து முந்தைய பகுதிகளில் பார்த்தோம். மூளையின் நினைவாற்றல் எப்படிச் செயல்படுகிறது, நம் குழந்தைகள் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர்களாகத் திகழ அவர்களுள் ஒளிந்திருக்கும் ஆற்றலை அதனை எப்படி தூண்டிவிடுவது என்பதை இனி வரும் தொடர்களில் பார்ப்போம்.

வலதுபுற மூளையின் ஒரு முக்கியமான செயல்திறன் காட்சிப் பதிவு நினைவாற்றலாகும் (Photo graphic memory). இது ஒரு அதிசயக்கத்தக்க திறனாகும். பண்டைய காலத்தில் யோகம் பயின்ற முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் இந்த ஆற்றல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஜெர்மானிய உளவியலாளர் ஒருவரின் ஆய்வின்படி, 3 வயதிற்கும் குறைவான குழந்தைகள் அனைவருக்குள்ளும் இந்த ஆற்றல் மறைந்திருக்கிறது.
காணும் காட்சியை அப்படியே புகைப்படம் எடுப்பது போல் நொடிப்பொழுதில் மூளையில் பதியச் செய்யும் ஆற்றல் இது.  இந்த ஆற்றல் வளர்த்தெடுக்கப்பட்டால், ஒரு முழுப்பக்கத்தையும் ஒரு நொடியில் படிப்பதோடு, சில நிமிடங்களில் ஒரு முழுப் புத்தகத்தையும் படிக்கும் ஆற்றல் கைகூடும்.

மனித நினைவாற்றலில், இடப்பக்க மூளை மற்றும் வலப்பக்க மூளை நினைவாற்றல் என இருவகை உண்டு. இடப்பக்க மூளை சொற்களை மனப்பாடம் செய்கிறது. வலப்பக்க மூளை படங்களாக பதிவேற்றுகிறது. அதனால் வலப்பக்க மூளையின் பதிவேற்றும் திறன் அதிவேகமானது. இது அருகமைவாகப் பதிவு செய்தல் முறையாகும் (appositional recording). இந்த அப்போசிஷனல் முறையைப் பயன்படுத்தினால், ஒரே நிகழ்வை, நிகழ்ச்சியை, தரவுகளை வியத்தகு வேகத்தில், அதாவது இடது மூளையின் வேகத்தோடு ஒப்பிடுகையில், 1/100 எனும் விகிதத்தில் பதிவு செய்துவிட முடியும்.

இந்த அப்போசிஷனல் பதிவுத் திறனை ஒருவர் கைக்கொண்டுவிட்டால் போதும், எந்தவிதமான தேர்வானாலும், பரீட்சையானாலும், இதர அறிவார்ந்த தளங்களிலும் சிறந்து விளங்கிடத் தேவையான அபரிமிதமான நினைவாற்றலை பெருக்கிட முடியும்.

“வண்டர் சைல்ட்” எனும் புத்தகத்தின் ஆசிரியர் பீட்டர் லாரி என்பவர், “குழந்தைகள் அற்புதமான, மாயத்திறன்கள் கொண்டவர்கள். உள்ளார்ந்த மனோசக்தியே அவர்களுடைய தனித்திறனாகும்” என்பார். அதேபோல், மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் தங்கள் மூளையின் ஆற்றலில் 3 முதல் 4% மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட தேவையினைக் கருத்தில் கொண்டு உங்கள் குழந்தையின் ஃபோட்டோகிராஃபிக் மெமரியையும், வலப்புற மூளையின் மற்ற ஆற்றலையும் மேம்படுத்தவும் ஆய்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டதே ‘மை ஸ்மார்ட் பேபி’ பயிற்சியாகும். இது பிறந்த குழந்தை முதல் 3 வயது குழந்தைகளுக்கான ஒரு தன்னிகரற்ற பயிற்சியாகும், அதுவும் வீட்டிலிருந்தபடியே! ஒரு நாளைக்கு வெறும் 5 முதல் 15 நிமிடங்கள் போதும் உங்கள் குழந்தையை ஒரு மேதையாக உருவாக்கிட.

’மை ஸ்மார்ட் பேபி’ பாடதிட்டம் மற்றும் அம்மாக்களுக்கான பயிற்சி பற்றிய தகவல்களுக்கு 9840999708 எனும் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் அல்லது www.mysmartbaby.in என்ற இணைய தளத்திலும் உங்களுக்குத் தேவையான விவரங்களைப் பெறலாம்.

உங்கள் குழந்தை ஒரு சுந்தர் பிச்சையாவதும், ஒரு சகுந்தலா தேவியாவதும் இனி உங்கள் கையில்!




            


No comments:

Post a Comment